முடிவாக என்னதானடா சொல்கிறாய்-வித்யா

காதல்... காதல்..
என்ன ஒரு ஆழமான
வார்த்தை இது..........!

பனிப்பாறைகளில் தொட்டில்கட்டி
சூரியனை தாலாட்டிற்கு
அழைத்து வந்தாயோ..........!

உன் தெளிந்த குழப்பமும்
குழம்பிய தெளிவும்
நிலையாவதெப் போது.....?

மலர் விரித்து காத்திராதே
என் பாதங்கள் முள்ளில்
நடக்க மட்டுமே
பழகிக்கொண்டுள்ளன.........!

குப்பிகளில் நானடைத்த
கண்ணீர்த்துளிகலெல்லாம்
பிறிதொரு நாளில்
என் காதல் சொல்லும்.....
உன் மதுக்கோப்பைக்குள்...........!

உன் காதலை நானறிவேன்
ஆயினும் எதையுணர்த்த
கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறாய்.......?

மின்கம்பி உரசிய
கூரைபோல் பற்றி எரிகிறது
என் நத்தைகூடு........!

எந்த அரிதாரமும்
பூசிக்கொள்ளவில்லை
எந்த நாடகமும் அரங்கேற்றவில்லை........
பார்வையாளனென நித்தமும்
நீ வந்து போனதேன்......?

உன் தெளிவான
உளறல்கள் என் வாய்வழி
வரவைக்கிறாய்.......

நீ புரிந்து கொண்டு
புலம்பும்போது
கேளா தூரத்தில்
நானிருப்பேன் காதலா........!

எழுதியவர் : வித்யா (9-Apr-14, 12:59 am)
பார்வை : 804

மேலே