நீ காதலிப்பதற்கு சாட்சி கேட்கிறாய்

என்னவனே இன்று
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!

ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!

திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?

கஸல் 680

எழுதியவர் : கே இனியவன் (8-Apr-14, 5:37 pm)
பார்வை : 208

மேலே