இயற்கையும் இறைவனும்

கார் மேகம் ஒன்று சேர்ந்து
மழைத்துளிகள் கொட்டுதடி
தாமரை இலைகள் அதனை சுமந்து
தட்டி தட்டி விளையாடுதடி

புழுதி நிறைந்த மண்ணுக்கும்
ஒரு வாசம் இருக்குதடி
மழைத்துளிகள் தன்னில் பட்டதும்
மண் வாசம் பரப்புதடி

புவியின் கருவில் புதையுண்ட விதையும்
புத்துயிர் பெற்றதடி
தன் மேல் இருந்த சுமையை பிளந்து
ஆலமரமாய் மாறுதடி

மாற்றிடம் தேடிய மீன்களும்
குளத்தில் கும்மாளம் போடுதடி
குளிக்க சென்ற நம்ம ஆளும்
குதூகழிக்க குளிக்கானடி

இயற்கையை படைத்த ஒருவனே
இவற்றை இயக்குகிறானடி
அவனே இவற்றை
சாவிகொடுத்து விளையாடுகிறானடி

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (9-Apr-14, 8:15 pm)
பார்வை : 274

மேலே