சந்தேகம் வேண்டாம்
வாழ்க்கையில் சந்தேகம்
வேண்டாமே மனிதனே
வருவது எல்லாமே
துன்பம்தான் மனிதனே ........
சொர்க்கமான வாழ்க்கையது
நரகமாக மாறிவிடும்
சோகமெல்லாம் உன்னுடைய
சொந்தமாக ஆகிவிடும் ......
கற்பனைக்கு எட்டாத
கபட்டு சிந்தனைக்கு
காலென்றும் கையென்றும்
முளைத்து உருவம் பெரும் .....
தனியான உலகத்தில்
தனிமை படுத்தப்பட்டு
துணையாக இருந்தவரோ
தூரம் போய் துன்பமளிப்பார் .......
உறவுகள் சிதறும்
உள்ளம் பதறும்
நினைவுகளின் நாடகத்தில்
வாழ்வே முடங்கும் .......
காண்பது எல்லாமே
கண்ணுக்கு சாட்சிதான்
ஆய்ந்து அறிவதுதான்
அதிலிருந்து மீட்சிதான் ......
உறக்கத்தை கொன்று
நிம்மதியை தின்று
உள்ளத்தை கெடுத்துவிடும்
சந்தேக பேய்தான் ........
உள்ளத்தை இழப்பதும்
உயிரினை கொள்வதும்
எண்ணத்தின் மாறுதலால்
எத்தனை துன்பங்கள் .......
இருக்கின்ற இன்பத்தை
எண்ணத்தால் துளைத்துவிட்டு
இறைவனிடத்தில் நிம்மதியை
எப்படி கேட்பாய் மனிதனே .......
உடல் தோற்றும் நோயைப்போல்
உள்ளம்தொற்றும் சந்தேகம்
இறப்பது இன்பம்தானே
இனியாவது புரிந்துகொள் .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
