எங்கள் நட்பு
எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே நட்பால் ஒன்றானோம்
முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
சின்ன சின்ன சண்டைகள் இடுவோம்
சீக்கிரத்திலேயே சமாதானத்திற்கு வருவோம்!
கவலைகளை கிள்ளி எறிவோம்
இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்!
அதுதானே நட்பிற்கு அழகு....