பலம் குறைந்த பெண்மை

பலம் குறைந்த பெண்மை
இயற்கையின் சாபம்
பதின்ம வயதில்
பருவம் எய்தி
மாதவிடாய் எனும்
அந்த மூன்று நாட்களில்
இரத்தம் இழந்து
உடல் தளர்ந்து
தாய்மை பேறு
இன்பம் காண
பிரசவத்தில் பெருவாரி
இரத்தம் இழந்து
மழலை செல்வம்
திடமாய் வளர
ரத்ததின் பாதி
பாலாய் புகட்டி....
இயற்கை குறைத்த
தன் பலம் மறந்து
சாதிக்கும் பெண்ணின்
மனோ பலம்....
வியப்பில் ஆழ்த்தும்
விசித்திரம் என்ன....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Apr-14, 5:26 pm)
பார்வை : 74

மேலே