தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
================================
அனைத்து படைப்பு தோரணத்திற்கு
எழுத்து தளமும் தோரணங்கட்டி
வந்து விழுந்த வாழ்த்து
கண்டு மகிழ்ச்சி என்னுள் சேர்த்து!!!
எழுத்து நிர் வாகத்தினருக்கும்
இனிய "எழுத்து" நெஞ்சங்களுக்கும்
நவில்வேன் நானும் வாழ்த்து
சிறந்து வாழ்ந்திடவே மகிழ்ந்து!!!
மதமும் இனமும் துறந்தே
கைகோர்ப்போம் பயணம் இனிதே
ஒற்றுமையின் தன்மை உணர்ந்தே
பற்று வைப்போம் பகையும் மறந்தே!!!
நல்ல நினைவில் நாளும்
வாழ்ந்தால் இல்லை தாழ்வே!!
இல்லை என்ற சொல்லே - இனி
இல்லாது சிறக்கும் வாழ்வே!!!
நினைத்ததெல்லாம் நடக்கும்
கேட்டதெல்லாம் கிடைக்கும் - நாளும்
துவக்கி வைக்கும்ஜெய வருடம்
நலமே தந்து வாழ்க்கை புலரும்!!!
ஜெய வருட விஜயமே
நாளும் தருமே யார்க்கும் ஜெயமே
மகிழ்ச்சி வாழ்வில் உதயம் - இனி
வருடம் யாவும் துள்ளும் இதயம்!!!
***************************************************************************
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்.....
அன்புடன்,
சொ. சாந்தி
****************************************************************************