என்னில் உன் நினைவுகள்
அழகான உன் நினைவுகள்
தினம்தோறும் வருகையில்...
நிலவும் தோற்று போகுதடா
ஓர்நாள் விடுப்பில்..!!
மாறாத உன் சிரிப்புக்குள்
விரும்பிநான் தொலைகையில்...
பூக்களும் ஆசைபடுமடா
புன்னகையாய் மலர்வதில்..!!
ஆழமான உன் அன்பிற்குள்
மூழ்கி நான் போகையில்..
ஆழ்கடலும் ஏங்குமடா
எல்லை இல்லா உன்அன்பிற்காய்..!!
என் உயிரான உன் உணர்வுக்குள்
உன் உயிர்தாங்கி இருப்பேனடா..
உன் காதல் சுமந்தபடி..!!
....கவிபாரதி....