ஞாபகங்கள்

காயம் பட்ட பாதங்கள் நான்...
நீ விட்டுப்போன உன் உன் பாதச்சுவடுகள்
மட்டுமே எனக்கு ஆறுதல்...

என் விழித்திரையின் ஈரங்கள்
என்னவளே உன் ஞாபகங்கள்...

இதுவரை நான் தொலைத்த நிமிடங்கள்
என்னவளே நீ என் தோல் சாய்ந்த நேரங்கள்...

பிடிக்காமல் போனாலும் கூட
நான் எழுதும் வரிகளில் நீ மட்டுமே...

இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (12-Apr-14, 2:50 am)
சேர்த்தது : சாதிரு
Tanglish : gnabagangal
பார்வை : 236

மேலே