விழியில்லா விழி துளிகள்
விழியில்லா விழி துளிகள்
பகலில்லை இரவில்லை
படுத்துறங்க இடமில்லை
கண்ணில்லை கனவில்லை
என்னை காதலிக்க யாருமில்லை
என் உடலுக்கு உயிர் கொடுத்த
அன்னையும் துணையில்லை
இரக்கமில்லா இவ்வுலகில்
விழியில்லா நான் இறக்கவும் வழியில்லை
இரவில் சிரிக்கின்ற விண்மீன்களை
கொண்ட இவ்வானமும்
பூவிற்குள் இருக்கும் தேனை ஆசையோடு
தேடும் வண்டினமும்
பகலில் உயிர் கொடுத்து ,
இரவில் நிழல் கொடுக்கும்
இயற்கையின் வரங்களும்
கடலிருக்கும் திசையை ஏக்கத்தோடு
தேடும் ஆறுகளும்
மழையின் சிரிப்பில் உயிர் வாழும்
விவசாயியும் ;
மழலையின் சிரிப்பில் உயிர் வாழும்
அன்னையும் ;
இருக்கும் நிலையான இப்பூவுலகில்
மறைமுகமாய் நகைத்து
நேரில் பார்க்கும் போது போலியாக,
சிரித்து வாழும்
மனிதநேயமில்லா இவ்வுடல்களுக்கிடையில்,
இருட்டில் மறைந்திருக்கும்
வெளிச்சத்தின் ,வழி தேடும்
என் விழியின்
கண்ணீர்த்துளி இது !!!