சோலையே சொர்க்கம்தான் காண் - நேரிசை வெண்பாக்கள் 20
கயல்விழி யோரம்உன் காதலைச் சொல்லி
மயக்கிடும் மைவிழியாள் நீதான் - புயல்வந்த
மாலையிலும் என்னை மறவாமல் வந்தாயே
சோலையே சொர்க்கம்தான் காண்! 1
தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்திடும் தேகங்கள்;
வாயில்லை பேசிடவே, வேண்டுமே – நோயில்லா
வாழ்க்கைக்குத் தேவை வருமானம்; ஆதலால்
ஏழ்மைதீர ஏதுவழி கூறு! 2
பாதையில்லாப் பாதையில் நான்பயணம் போகையிலே
பாதியில் பாழும் மனிதரால் – பேதைநான்
வீழ்த்தப் படலானேன்; வேதனை யுற்றாலும்
வாழ்வேன் வளமாய் இனிது! 3
மெய்யான வாய்மையைப் பாரறிய வீணோரும்
பொய்யெனவே ஆழ்கடலில் போக்கினாலும் – மெய்மைதான்
மேகம் மறைத்து மிளிரும் கதிரென
வேகமாய்த் தோன்றுமே காண்! 4
நேரிசை வண்ணத்தில் நேரிழையாள் நெஞ்சமென்று
பூரித்த உம்கவிதை வெண்பாவின் - தேரில்
வலம்வந்த தெய்வீக வேடிக்கை என்றே
பலமாய் உரைக்கலாமே பா! 5
பலவிகற்ப இன்னிசை வெண்பா
உயிரான வாய்மையைப் பாரறிய வீணோரும்
பொய்யெனவே ஆழ்கடலில் போக்கினாலும் – மெய்மைதான்
மேகம் மறைத்து மிளிரும் கதிரென
வேகமாய்த் தோன்றுமே காண்! 1
நேரிசை வண்ணத்தில் நேரிழையாள் நெஞ்சமென்று
கூறிய உம்கவிதை வெண்பாவின் - தேரில்
வலம்வந்த தெய்வீக வேடிக்கை என்றே
பலமாய் உரைக்கலாமே பா! 2