கோபத்தின் கொலையில் - அன்பெனும் குழந்தைகள் --- இராஜ்குமார்---

கோபம் குதிரையில்
வலம் வந்து ..
உற்ற உறவெனும்
பொல்லாத போர்களத்தில் ..
அன்பெனும் அழகு
குழந்தைகளை
கொன்று குவித்து
முழக்கமிட்டது - வெற்றி
முழுவதும் தனக்கென்று .!!
இன்னும் எத்துனை
குழந்தை பலியாகும்
ஒற்றை கோபத்தை
ஒழித்து கட்ட ..!!
அன்பை ரசிக்கும்
குழந்தைகளை ..!
ரசித்து ரசித்து
வளர்கிறேன் - நானும்
ஓர் குழந்தையாய் ..!!
-- இராஜ்குமார்
===============================================
அன்பை தேடும் மனம் என்றும் குழந்தை உள்ளமே
==============================================