வறியிலும் வள்ளலடி

ஓலை குடிசையில் பிறந்த ஏழை
வேலை இல்லாது...
கருவேழம் காட்டையெல்லாம்
வெட்டிச்சாய்த்த வேளை...!

பட்டினியால் ஒட்டிய மேனியுடன்...
சிந்தையில் மூழ்கிட...
என்வயிற்றை நிரப்ப
வேழம் மரத்தை மரித்து
குயில் வீட்டைக் களைத்து
ஒரு ஜான் வயிற்றை நனைத்திடவா?

உள்லூரும் மனிதம் அழுது
கண்ணில் வடித்தது கருணை நீராய்!!
ஏழ்மை பெரும்துயரென வாழ்வு சொல்ல!!
அதனினும் மனிதம் பெரிதென உயிர் சொல்ல!!

மனம் நடத்தும் பட்டிமன்றம்
விவாதத்தின் முடிவில்...
வென்றது மனிதம்... !!
வெட்டிய அருவாள் திரும்பிட
தன் கழுத்தறுத்து உயிர்விட...
ஏழைமனம் கொண்டது பெருமிதம் !!

அழுதது இயற்கை...!
தியாகத்தை நினைத்து
பெரும் மழையாய் ...!
துரோகம் இழைத்தது மழைதான்!!
முன்பே அழுதிருந்தால் ஓர்
உயிரும் மனிதமும் மிஞ்சிருக்கும்
அதுபோல் மனிதர்களில் சிலர்...

பாரினில்...
வள்ளல் பாரியை அறிவார்
வல்வில் ஓரியை அறிவார்
வறுமையில் கொடைதந்த
ஏழ்மையை யாரறிவார் !!

குயில்கள் கூடிக் கூடி
கூவிடும் முகாரியை ரசிப்பார் யாரோ !
எத்தனை பெரியமனம் படைத்திடுனும்
ஏழ்மையில் பிறந்தால் ....
அறிந்திடாதுலகு ...!

எழுதியவர் : கனகரத்தினம் (13-Apr-14, 1:34 pm)
பார்வை : 125

மேலே