காதல் மட்டும் வாழ்க்கையல்ல

காதல் மட்டும் வாழ்க்கையல்ல

காதல் மட்டும் வாழ்க்கை யல்ல
காதலில்லா வாழ்வுமல்ல
காதல் ஒன்றே
பிரதானமல்ல
கொண்டாடும் அளவிற்கு
விதானமுமல்ல
வாழ்க்கை கடலின்
சிறு துளி
பூமி பந்தின்
சிறு புள்ளி
காதல் களிறு
மதங் கொண்டால்
அங்குசம் யாவும்
பலனிழக்கும்
காமப் புரவி
தறிக் கெட்டால்
கட்டுப் படுத்தும்
லகானில்லை
காதல் காட்டில்
தீப்பிடித்தால்
கட்டுக்கடங்கா தீப்பற்றும்
தீயில் விளையும் பல சேதம்
தேசம் கடந்தும்
தேகம் சுடும்
திரும்பி பார்த்தால்
சோகம் மிகும்
காதல் ஒன்றும்
கடவுளல்ல
மனமுருகி உச்சரிக்கும்
வேதமல்ல...
காதல் ஒரு கலவரம்
அது ஹார்மோன்களின் களேபரம்
மனக் கதவை மூடாதீர்
காதல் காற்று தீண்டி போகட்டும்
பதின்ம உணர்வை
தூண்டிப் போகட்டும்
புயலாய் மாறி
பூகம்பமாய் வெடிக்காமல்
ஸ்பரிசம் தந்து
தொட்டுதாலாட்டி போகட்டும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (13-Apr-14, 6:50 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 110

மேலே