வழியெங்கும் பிதற்றுப்வனின் குரல் 18

இந்த வாரம் நான் எழுத முயற்சிப்பது...

"கோவை கவிஜி" யின் கவிதைகளைப் பற்றி.

"கவிஜி" என்ற பெயரே எனக்கு வித்தியாசமாகவும்...நிரம்ப ஆளுமை மிக்கதாகவும்
தோன்றுகிறது. நான் கவிதைக்கானவன் என்பதை
அழுத்தமாகச் சொல்லும் இந்தப் பெயரே என்னை அவரது கவிதைகளைப் படிக்க வைத்திருக்கிறது.
புதுச்சேரியில்...ஈரோடு தமிழன்பன்-80...விழாவில்
அவரோடு பேசும் வாய்ப்புக் கிட்டியது. பொறியியலாளர் ஒருவர்...அதுவும் இருபதுகளின் கடைசியில் இருக்கும் மிக இளைஞர் ஒருவர் கவிதையை...இத்தனைத் தீவிரமாகக் கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிகத் தீவிரமாக...பல எல்லைகளில்...
தமிழ் கவிதையின் தளத்தை விரிவுபடுத்தும் அவரது கவிதைகள் எல்லோரின் வாசிப்பிற்கும்...
கவனத்திற்கும் உரியது. படிமங்களின் மேல் தீராத
காதல் கொண்டிருக்கும் அவரது கவிதைகள்...
எல்லையற்ற கற்பனையை தன் கவிதைகளின் வழியே தூவிச் செல்கின்றன. மயில் ஒன்று மழைக்காக ஆடும் ஆனந்தம் அவர் கவிதைகளின்
வழியே வாசிக்கும் யாருக்கும் கிட்டக் கூடியது.
தன் தனித் திறத்தால்...பொது ஜனப் பத்திரிகையிலும் தன் கவிதைகள் (ஆனந்த விகடனின்.."சொல் வனம்") வெளியாகும் ஆற்றல் மிக்க ஒரு இளம் கவியின் கவிதைகள் குறித்த
என் பார்வைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரும் ஆனந்தம் கொண்டு....

மீண்டும் வருவேன்...காலத்தின் பெரும் துணையோடு...அவர் கவிதைகள் பற்றிச் சொல்ல.

எழுதியவர் : rameshalam (14-Apr-14, 12:41 pm)
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே