தானறியு மாற்றாற் றொழுதெழுக - ஆசாரக் கோவை 9
சிந்தியல் வெண்பா
நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி. 9 ஆசாரக் கோவை
பொருளுரை:
அதிகாலையில் ஒரு சிறு ஆல் அல்லது வேப்பங்குச்சியைக் கடித்து, அதனால் பல் துலக்கி, கண்களைக் கழுவி தான் வணங்கும் கடவுளைத் தனக்குத் தெரிந்த நெறியால், அவரவர் சமய மரபுப்படி, தொழுத பின் ஒரு காரியத்தைத் தொடங்க வேண்டும்.
பகல் மறையும் மாலைப் பொழுதில் தான் வணங்கும் கடவுளை நின்று வணங்குவது குற்றமாம். அமர்ந்து வணங்க வேண்டும்.