அயோத்தி நாயகன்

கோசலத்தின் கொற்றவன் அவன்
கோலாச்சி புரிந்த வீரனவன்
அடுக்கடுக்காய் மாளிகைகள் அதில்
அலங்காரமாய் முன்று நங்கைகள்
அவதாரமாய் வந்த அரசனவன்
தெருக்களில் வண்ண நட்சத்திரங்கள்
நவமணிகளும் மாணிக்கங்களும்
மரகதங்களும் தெரு சிறுவர்களின் விளையாட்டு
பொருள்கள் - அக்தோ ஒரிது
இந்திர லோகமல்ல அவன் இந்திர தேவனுமல்ல
சூரிய நகல் அவன்
அற்புத அயோத்தியின் தலைவனவன்
அருபதனாஇயிரம் ஆண்டுகள்
ஆண்டவன் அவன் - அந்த
ஆண்டவனின் தூதன் அவன்
நல மக்களை பெற்ற நரன் அவனே
தசரதன்........

(என் சிறிய முயற்சி ராமாயணத்தை கவி நடையில் எழுத நினைத்தேன் இதற்கு கடவுள் அருளும் & உங்கள் ஒத்துழைப்பும் வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்)

எழுதியவர் : கே என் ரமணன் (14-Apr-14, 2:51 pm)
சேர்த்தது : கே என் ரமணன்
Tanglish : ayothi naayagan
பார்வை : 142

மேலே