கே என் ரமணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கே என் ரமணன் |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 09-Apr-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 14 |
உலக உயிரினங்களின் கடைகோடி பிறப்பு - மனிதன்
என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் மீண்டும் உங்களது ரசிகன் கே என் ரமணன் 5 வருட இடைவெளிக்கு மன்னிக்கவும்!! என்னுள் ஊற்றெடுக்கும் எனது படைப்புகளுக்கு தங்கள் ஆதரவை வேண்டுகிறேன்
கண்களின் வழியே காட்சிகள் தோன்றும்
கண்கள் இமைத்த நேரத்தில் கட்சிகள் தோன்றும்
எண்ணத்தின் மாற்றங்கள் இங்கு யார் தான் அறிவர்
எண்ணிக்கை வாக்கெடுப்பில் இங்கு யாரும் வெல்வர்
உள்ளதை சொன்ன உத்தமர்கள் வாழ்ந்த மண்ணிலே இங்கு உள்ளவர்கள் யார்
மேடையில் பேசும் பேச்சுக்கள்
மேனியை சீர்படுத்தும் வெறும் பூச்சுக்கள்
மனதில் பட்டதை பேசும் பேச்சுக்கள்
மங்காத புகழ் பாடும் வரலாற்று அச்சுக்கள்
கடவுள் படைத்த உலகம் இது
கடவுள் வாழவே வாடகை கேட்கும் காலம் இது
இடையில் முளைத்த ஆங்கில காய்கள்
நம்மை அடிமைகொள்ளும் நீச கரங்கள்
இடம் பெயர்ந்து வந்த தீ குழம்புகள்
இன்று நம் இருளை நீக்கும் தீகுச்சிகளா?
நம் காலத்தின் கட்டுபாட்டுக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம்
கட்டுபாட்டை மீறி முளைதவர்களே இங்கு மரமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்....!
கட்டுபாட்டை கட்டி கொண்ட நம் மனம்
கல்லடி பட்ட செடிகளாய் செத்து மடிகிறது ...!
இனிமேல் ஒன்றுமில்லை நீ இழப்பதற்கு!......
இனியும் ஓய்வு கொடுக்காதே நீ பிழைப்பதற்கு !.....
தோழனே !.......
கண் மூடி சில காலம் நீ கிடந்ததால்
காலம் உன்னை கை விட்டு சென்றது ....
வருந்தாதே!......
உனது கை கொண்டு காலத்தின் கைபற்று.....
உன் மேல் காலம் வைக்கும் பற்று......!
(...)
நிலாமுகம்
இல்லை இல்லை
உன் முகம் போல் நிலவு
அந்த நிலாவின்
ஒப்பீடாய் உன்னை
சொல்ல மாட்டேன்
வேண்டுமானால் உன்
அழகிற்கு எடுத்துக்காட்டாக
அந்த நிலவு
இருந்துவிட்டு போகட்டும். .............
கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகள் எனும் கதவை சாத்தி
என் காதல் எனும் இதயம் திறந்தேன்
செம்பனியால் மெத்தை விரித்தேன்
உன்னை உறங்க வைக்க முயற்சித்தேன்
தூக்கம் உன்னை தொடாமல் என்னை தொட்டது ஏனோ
தூயவளே நீயும் என் இதயம் விட்டு தொலைந்ததும் ஏனோ
காதல் எனும் தேர்வில் நான் மதிப்பெண் இழந்து நின்றேனோ !
காதல் எனும் படத்தில் நான் என்றும் தற்குறி தானோ !...
உங்களில் ஒருவன் தான் நான்!..
காலை பனியும்
மத்தி வெயிலும்
மாலை காற்றும்
இரவு குளிரும்
என்னை பார்த்து தான்
தன் பணியை பார்க்கும்!....
உங்களில் ஒருவன் தான் நான்!...
நட்சத்திரம் என் நலம் கேட்கும்
நிலவும் வந்து தாலாட்டும்
காற்று என்னை சூழ் கொள்ளும் - ஏனெனில்
வானமே என் வீட்டின் கூரை!.....
உங்களில் ஒருவன் தான் நான்!...
பசி என்ற ஒன்றை தவிர வேறு
ருசி அறியாத ஜீவராசி!....
உங்களில் ஒருவன் தான் நான்!...
ஒரு வேலை இன்றி இருந்தும்
மூன்று வேளைகளை கடந்தவன் தான் நான்!....
உங்களில் ஒருவன் தான் நான்!.....
படுக்க பஞ்சனை இல்லை
குடிக்க பசும்பால் இல்லை
குடுக்க மனைவியும் இல்லை
ஒருவன் வேலை
இழந்தான்
குடும்பம்
மூன்று வேளைகளை
இழந்தது ...............!
-
நானும் நீயும்
படகாய் நதியாய்!
பாய்மர கப்பாலாய் கடலாய்!
ஒன்றில் ஒன்றாய் கலந்திருந்தோம்!
சீரிய புயலெனும் தாக்கத்தில்
மண்ணில் புதைந்து போனது
நம் காதல் எனும் படகு!
மீண்டும்
அலையொன்று அடித்தால்
கரை சேரும் - அதில்
மீண்டும்
நம் கைசேரும் !
நம் காதல் படகோ!
அலையெனும் எதிர்காலத்தின்
கையில் குறைகொன்டு நிற்கிறது !
(கவிபெருமக்களுக்கு வணக்கம் ...வழக்கம் போல்..தற்பொழுதும்...ஒரு உண்மை நிழற்படத்தினைக் கண்டு.. (கடந்த 27.01.2012 அன்று ஓர் ஆங்கில நாளிதழில் வெளிவந்த உண்மை படமிது) எனக்குள் தோன்றிய கற்பனை வரிகள் இவை....
குறிப்பு :::::: இந்த கவிதை தொகுப்பு கடந்த 22.05.14 முதல் 25.05.14 வரை சென்னை மாநகரில் நடந்த """75 மணி நேர தொடர் உலக சாதனை கவியரங்கில்""" வாசிக்க பட்டு அனைவரின் பாரட்டினையும் பெற்ற கவிதை தொகுப்பு இது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து உங்களின் விழிகளுக்கு விருந்தாய் வைக்கின்றேன்...
உனை வயிற்றில் வைத்திருந்தேன்
தாய்மை உணர்வை காட்ட....இங்கே
சற்று உயரத்தில் வைத்திருக்கிறேன்
வாழ்வின் உயர்வை காட