முடிவு உன் கையில்

கண்களின் வழியே காட்சிகள் தோன்றும்
கண்கள் இமைத்த நேரத்தில் கட்சிகள் தோன்றும்
எண்ணத்தின் மாற்றங்கள் இங்கு யார் தான் அறிவர்
எண்ணிக்கை வாக்கெடுப்பில் இங்கு யாரும் வெல்வர்
உள்ளதை சொன்ன உத்தமர்கள் வாழ்ந்த மண்ணிலே இங்கு உள்ளவர்கள் யார்
மேடையில் பேசும் பேச்சுக்கள்
மேனியை சீர்படுத்தும் வெறும் பூச்சுக்கள்
மனதில் பட்டதை பேசும் பேச்சுக்கள்
மங்காத புகழ் பாடும் வரலாற்று அச்சுக்கள்
கடவுள் படைத்த உலகம் இது
கடவுள் வாழவே வாடகை கேட்கும் காலம் இது
இடையில் முளைத்த ஆங்கில காய்கள்
நம்மை அடிமைகொள்ளும் நீச கரங்கள்
இடம் பெயர்ந்து வந்த தீ குழம்புகள்
இன்று நம் இருளை நீக்கும் தீகுச்சிகளா?
நாம் வாழ்ந்து காட்ட வந்தோம் இங்கே!....
நொந்து வருத்த பட வரவில்லை இங்கே!...
முடிவு உன் கையில்!...