நம் காலத்தின் கட்டுபாட்டுக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம் கட்டுபாட்டை மீறி...
நம் காலத்தின் கட்டுபாட்டுக்குள் சிக்கி கொண்டிருக்கிறோம்
கட்டுபாட்டை மீறி முளைதவர்களே இங்கு மரமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்....!
கட்டுபாட்டை கட்டி கொண்ட நம் மனம்
கல்லடி பட்ட செடிகளாய் செத்து மடிகிறது ...!
இனிமேல் ஒன்றுமில்லை நீ இழப்பதற்கு!......
இனியும் ஓய்வு கொடுக்காதே நீ பிழைப்பதற்கு !.....
தோழனே !.......
கண் மூடி சில காலம் நீ கிடந்ததால்
காலம் உன்னை கை விட்டு சென்றது ....
வருந்தாதே!......
உனது கை கொண்டு காலத்தின் கைபற்று.....
உன் மேல் காலம் வைக்கும் பற்று......!
நீயும் வாழ்வாய் வளம் பெற்று !...