கசந்து போகும் உறவுகள்

வாழ்க்கை ஒரு
பூங்காவனம் என
பூப்போல் கனவுகளை சுமந்து
பூக்கள் மலர முடியாமல்
கசக்கப்படும் போது

கசங்கும் உறவுகள் .....

ஆளுமை எனும்
அதிகாரமான
விதி முறையால்
விபத்துக்களை சந்தித்து

கசங்கும் உறவுகள் ....

கற்ற பெற்றோர்களின்
கருத்து வேறுபாடால்
காயங்களை சுமந்து

கசங்கும் பிஞ்சு உள்ளங்கள் ...

மண வாழ்வின்
மன மாற்றத்தினால்
மருண்டு போய்
மௌனமாய்

கசங்கும் உறவுகள் ...

நான், எனது, என்னுடைய எனும்
சுய நலத்தால்

கசங்கும் மனித உறவுகள் ....

உடல் சுருங்கி
உள்ளம் சுருங்கி
ரத்தம் சுருங்கும் நேரத்தில்
உதாசீனத்தால்

கசங்கும் முதுமை உறவுகள்

உறவுகள் கசந்து
உறவுகள் நலமற்று
உறவுகள் வர்த்தகமாகி
உறவுகள் உருவாகாமல் அழிவது ஏன்?

நலமற்ற
சுய நலம் தான் ...

சுய நலம் உள்ள வரை
"சுயம்" நலமாக இயங்காது

உறவுகளும் இனிக்காது.

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (14-Apr-14, 3:09 pm)
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே