பதில் சொல்லடி கண்மணி

என் உடலும் எந்தன் உயிரும்
உனக்கே சொந்தமே
என் உயிர் பிரியும் வரையில்
உந்தன் நினைவில் வாழுமே !

என் இதயம் உன் காலடியில்
துடியாய் துடிக்குதே
உன் பாதம் சேர்த்து
என் துடிப்பை நீயே
நிறுத்திவிடு கண்மணி !

கனவிலும் நினைவிலும்
அழியா உன் உருவமே
வாழ்வாத மடிவதா
முடிவிலும் தோற்கிறேன் !

நான் உன் மேல் கொண்ட காதல்
கடலலையாய் ஒய்ந்ததே
நீ கொண்ட காதல்
நீரின் எழுத்தாய் மறைந்ததே
எங்கே நீ என் கண்மணி !

உறவுகள் துரத்துதே
என் செயலே எனை வெறுக்குதே
காதலின் இனிமை
மரணத்தை தேடுதே
பாசம் வைத்த நானே
பாலில் நஞ்சை ஊற்றும்
கோழை நானே
பதில் சொல்லடி கண்மணி !

எழுதியவர் : அன்புடன் விஜய் (25-Feb-11, 3:31 pm)
சேர்த்தது : vijeyananth
பார்வை : 577

மேலே