விதியின் விளையாட்டு20

மனோஜ் ஷிவானியின் வீட்டிற்கு காரில் பறந்தான்.
10நிமிடத்தில் போய் நின்றது அவனது கார்........

உள்ளே சென்ற மனோஜ்க்கு பெரிய வரவேற்பு காத்துக்கொண்டிருந்தது.

மாமா,மாமி 2பேரும் முதன்முதலில் தனியாக வந்த மருமகனை வரவேற்று உபசரித்தனர்.
ஆனால் இவன் கண்களோ தனது வருங்கால மனைவியின் வருகையை நோக்கிக்கொண்டிருந்தன........


இதை புரிந்து கொண்ட அவர்கள் ஷிவானியை வர சொல்லி பேச சொல்லிவிட்டு தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர்.

ஷிவானியும் மனோஜும் சிறிதுநேர மௌன இடைவெளிக்கு பிறகு பேச ஆரம்பித்தனர்.

பேசி முடித்ததும் தன் செல்போன் நம்பரை அவளிடம் கொடுத்து அழைக்கும் படி சொன்னான்??

சரி! என்று வாங்கி கொண்டாள் ஷிவானி.
ஷிவானியின் அப்பா அம்மாவிடமிருந்து விடை பெற்று சென்றான் மனோஜ்..........
___________________________________________

அங்கு மதனின் கேஸ் விஷயமாக வந்த போலிஸ் அதிகாரி வினோத்......இந்த கேஸ் முடிந்து விட்டது நிஷா உங்கள் மேல் எந்த தவறு இல்லை என்று சொன்னதால் நீங்கள் வந்து ஒரு கையொப்பம் போட்டு விட்டு சென்றால் எல்லாம் சரி ஆகும் என்று சொன்னார்.


படபடப்புடன் இருந்த 2பேரும் இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்கள்............

எப்போது வரணும் சார் என்று கேட்டான் மதன்???

இப்பவே வந்து போட்டுவிட்டால் விஷயம் முடிஞ்சிரும் என்று சொன்னார்..

சரி உடனே வருகிறேன் சார் என்று சொல்லிவிட்டு மதன் அவருடன் கிளம்பினான்.

இன்னிக்கும் நேரடியாக காதலை சொல்லமுடியவில்லையே என்ற வருத்தம் மனதிற்குள் இருந்தது ரிஷானிக்கு........

ஏமாற்றத்துடன் இருவரும் பிரிந்தனர்???????

ஜீப்பில் ஏறியதும் அதிகாரி வினோத்...

வாழ்த்துக்கள்!! மதன் என்று கைகொடுத்து குலுக்கினார்............

எதுக்கு சார் என்றான் மதன்?

நீ பேசிட்டிருந்தது உன் காதலி தானே?

ஆமா சார் என்றான்.

அதுக்குதான் வாழ்த்து சொன்னேன், ஏன்னா என் நண்பன் அந்த பொண்ணை எவ்ளோ பார்த்து கெஞ்சி காதலிக்க முயற்சி செய்தான் ஆனால் இவள் சம்மதிக்கவில்லை. ஆனால் நீ குடுத்து வச்சவன்டா!

நல்ல பொண்ணுதான் சந்தோஷமா இருங்க அவகிட்டயும் சொல்லிரு என்ஜாய் என்று மறுபடியும் வாழ்த்தினார்.

மதனுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது......!

ஸ்டேஷன் வேலைகளை முடித்து விட்டு மதன் வீட்டிற்கு சென்றான் போனதும் ரிஷானியிடம் செல்போனில் பேச ஆரம்பித்தான்......!

மதன்,ரிஷானி காதல் கல்லூரி முழுவதும் பரவி அனைவரின் கண்களும் இவர்கள் ஜோடி மீதுதான் என்று சொல்கிற அளவுக்கு சேர்ந்து நடந்து கொண்டிருக்க!!!!!!!!!!

இன்னொரு புறம் மனோஜ்,ஷிவானி காதல் சென்னை முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது............!
விதி தொடரும்..........

எழுதியவர் : ப்ரியா (15-Apr-14, 1:19 pm)
பார்வை : 298

மேலே