பெண் மனது

பெண் மனதை...
தொட்டுப்பார்க்க
உந்தன்............அழகு
பணம் தேவையில்லை...!
அன்பை உணரும்
நல்ல மனது போதும்...!!

உன் அன்புணர
நீ வெறுத்தாலும்
விலகிடாமல்..
உன்னோடு
சேர்ந்திருப்பாள் ..!!

நீ கோவம் கொண்டு
தூற்றுவதால்..
தூரம் நின்று
முனங்கிடுவாள்..
நீ அமைதி தழுவி
நிற்கையிலே..
அடிபணிந்தே
மண்டியிடுவாள்...!

உன் விருப்பம்
திணிக்கையிலே..
தன்விருப்பம்
வேண்டுமென்பாள்..
அவள் விருப்பம்
மதிக்கையிலே..
உன் மனவிருப்பம்
ஏற்றுதினம்..
உனக்காக வாழ்ந்திடுவாள்..!!

..கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (15-Apr-14, 1:50 pm)
Tanglish : pen manathu
பார்வை : 900

மேலே