நன்றி தோழியே

அன்பு தோழியே,
இந்த கவிதை உனக்கு அர்ப்பணம்!

தொலைந்து போன என் கவிதைக்கு
முகவரி தந்தவள் நீ!
இறந்து போன என் ஆசைக்கு
உயிர் தந்தவள் நீ!
கரைந்து போன என் கனவுக்கு
வண்ணம் தீட்டியவள் நீ!
புதைந்து போன என் புன்னகையை
புதுபித்தவள் நீ!
சிதறி போன வார்த்தைகளை சீராக்கி,
களைந்து போன எண்ணங்களை நேராக்கி,
எனக்கு ஊக்கம் தந்த..

என் அன்பு தோழியே,
இந்த கவிதை, உனக்கு அர்ப்பணம்!

எழுதியவர் : சுதா ஆர் (16-Apr-14, 11:59 am)
Tanglish : nandri thozhiye
பார்வை : 947

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே