விதியின் விளையாட்டு21

ரிஷானி,மதன்&மனோஜ் ஷிவானி காதல் ஜோடிகள் அடிக்கடி வெளி இடங்களில் சந்தித்தும் மணிக்கணக்கில் செல்போனில் பேசியும் தங்கள் உண்மை காதலை உறுதிபடுத்தி கொண்டிருந்தனர்......!

ரிஷானியின் காதல் ஷிவானியை தவிர வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது.

இவர்கள் சந்திப்பிலும் பழக்கத்திலும் நாட்கள் கடந்ததே தெரியவில்லை 3 மாதங்கள் ஓடி விட்டன மதனுக்கும் பரீட்சை முடிந்தாகி விட்டது வேலைக்கு போக சரியான வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தான்........

ஒரு நல்ல கம்பெனியில் கை நிறைய சம்பளத்தில் வேலை வீடு தேடி வர அதை ஏற்றுக்கொண்டனர் மதன் வீட்டார்........!

அதில் ஒரு சிக்கல் என்பதால் ரிஷானியிடம் பேசி தெளிவு பெற்ற பிறகு முடிவு எடுக்கலாம் என்று மனதில் நினைத்தவன் பெற்றோரிடம் வந்து வெளியில் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டு வந்து முடிவு சொல்கிறேன் என்று சொலிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மதன் .....!


தாங்கள் வழக்கமாக சந்திக்கும் அம்மு காபி ஷாப்பில் வருவதாக ரிஷானியிடம் சொல்லிவிட்டு விரைந்தான் மதன்........

அம்மு காபி ஷாப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

என்னவோ முக்கியமான விஷயம் என்று அழைத்தீர்கள் என்ன என்று வினவினாள் ரிஷானி???

எனக்கு ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது என்றான் தாழ்ந்த குரலில்......

ஓ!அப்டியா? நல்ல விஷயம் தானே அதற்கு ஏன் கவலையாக இருக்கீங்க என்றாள்?

நல்ல விஷயம் தான் ஆனால் என் கம்பெனி இருப்பதோ தூரத்து தேசம் நாம் நினைத்ததும் பார்க்கவோ, அடிக்கடி பேசவோ முடியாது என்றான் வருத்தத்துடன்!!!!!!

சரி!சரி!அதனால என்னடா?கொஞ்ச நாள் தானே கஷ்டம் அதன் பிறகு திருமணம் முடிந்ததும் நானும் உன்கூட வந்திரலாம் அப்போ எந்த பிரச்சனையும் இல்லை கவலை படாதீங்க என்றாள் ஆறுதலாக.........

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது வானம் இருண்டது மழை வருவதற்கான அறிகுறி இருக்கவே.........

பெரிய மழை வரும் போல் இருக்கிறது சீக்கிரம் கிளம்பலாம் என்று சொல்வதற்குள் மழை வந்து விட்டது.........!

அப்பொழுது மழைக்கு ஒதுங்குவதற்காக நிறைய பேர் காபி ஷாப்பினுள்ளே வந்தனர் வந்தவர்களில் இருவர் மனோஜும் ஷிவானியும்......

ஷிவானி,,,, ரிஷானியை மதனுடன் பார்த்ததும் திடுக்கிட்டாள் மனோஜிடம் என்ன சொல்வது என்று விளித்துக்கொண்டிருந்தாள்..........ரிஷானி மதனும் அதே நிலைமையில் நின்றனர்............
_____________________________________________

ஷிவானி மற்றும் மனோஜின் பெற்றொர் திருமண ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தனர்.......

திருமணபத்திரிக்கையை வாங்குவதற்காக சென்று கொண்டிருக்கும் போது,,,,,,,,,

பெண்கள் இருவரும்........நாளைக்கு ஷிவானிக்கு நகை மற்றும் கல்யாணத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்க போறோம் கூட வந்திருங்க அண்ணி என்று அன்பான கட்டளையிடுகிறார் ஷிவானியின் அம்மா......!

சரி...! காலையிலேயே குடும்பத்தோட வந்திடுறோம் என்று சொல்லி விட்டு சந்தோஷமாய் பேசி சிரிச்சிட்டிருக்கும் போது..............

அங்கு வந்தார் அந்த ஜோசியர்(ரிஷானி குடும்பத்தின் குடும்ப சாமியார்).......!

விதி தொடரும்......

எழுதியவர் : ப்ரியா (16-Apr-14, 12:29 pm)
பார்வை : 274

மேலே