உனை எண்ணி காத்திருப்பதால்

நினைவில்
நின்றாயடி
எனது கனவுலகில்
வந்தாயடி...........!

கொட்டிவைத்த
முத்துக்களும் தனது
அழகினை
மறைக்கிறேதே உனது
வருகையைக்கண்டு.............!

பார்பதற்குள்
எனை கடந்து சென்றாயடி
நான் கண் விழித்து
இருந்தும் கூட...........!

காலம் எனக்கு
தெரியவில்லை உனை
எண்ணி
காத்திருப்பதால்........!

பிரியமுடன்
நான் இருக்கையில்
எனைவிட்டு
பிரிந்து செல்லாதே...........!

உன்னை
எண்ணியே வாழ்கிறேன்
உன்மேல் அதிக நேசமும்
கொள்கிறேன்............!

எழுதியவர் : லெத்தீப் (16-Apr-14, 3:14 pm)
பார்வை : 171

மேலே