விடியா இரவுகள்

கசங்கிப் போய் கிடக்கும்
நாட்காட்டியில்
கடந்துப் போனதோர்
தேதிக்கான
அனாவசியத் தேடலாய்
விளைவென்றேதும் இல்லாமல்
விடியாமலேயே விடைபெறுகிறது
முன்பொரு நாள்
கண்ட கனாவின்
தொடர்பாய் தொடர்ச்சியாய்
வீறிட்டு எழச்செய்யும்
கனவுகள்
கொண்டதோர் இரவு !