silandhi
சிலந்தி
-----------
சிலந்தியைப் பார்த்து கத்துக்கணும்
சுறுசுறுப்பாய் இருக்க கத்துக்கணும்
முயற்சி திருவினையாக்கும் என்பதை
அது கூடு வேயும் போது பார்த்து
நன்றாய் தெரிஞ்சுக்கணும்
தன் வாயில் சுரக்கும்
வெண் பட்டு நூலிதழால்
வண்ண வண்ண கோலம்போல
உன்னத கூடு வேயும்
அழகும் வலிமையும் மிக்க
அந்த கூடதைக் கட்ட-சிலந்தி
பொறுமைத் திறமை
இரண்டிற்கும் இலக்கணம் -அங்கே
தெள்ளத் தெளிய விளக்கிடும் நமக்கு
கூடு வேயும் வேளையிலே
பட்டு நூலது பிய்ந்து பிய்ந்து போகும்
பல தடவை -ஆயினும்
சோர்ந்து போகாத சிலந்தி
முழு வீடு கட்டி முடிக்கும் வரை
முயற்சியை ஒரு போதும் விடுவதில்லை
இதைக் கண்ட மன்னன் ஒருவன்
போரில் ஏற்பட்ட தோல்விகளை மறந்து
மும்மரமாய்ப் போரிட்டு வெற்றி பெற்றான்
அவன்தான் சரித்திரம் சொல்லும் -மன்னன்
ஸ்காட்லான்ட் தேசத்து ராபர்ட் புரூஸ்
உன்னத பூச்சி அந்த சிலந்தி
நமக்கும் வாழ வழி சில கற்றுத்தர
இயற்கை படைத்த விந்தைப் பூச்சி
=============================