நகைச்சுவை 105

இருபது பேர்களின் உயிரைக் குடித்த ஒரு டிரக் டிரைவரை கைது செய்த போலிஸ் அவனிடம் .. "இருபது பேர்களை கொன்றுவிட்டாயே .. எப்படி நடந்தது இந்த சம்பவம்", என்று கேட்க அவன், "சார் நான் நார்மல் வேகத்தில் தான் வண்டியை ஓட்டிச்சென்றேன். பிரேக் அழுத்தும் பொழுது தான் தெரியவந்தது பிரேக் பழுதாகியிருக்கிறது என்று. சாலையின் ஒருபுறத்தில் இருவர் சென்று கொண்டிருந்தனர். மறுபுறத்தில் திருமண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.

இருவர் செல்லும் வழியில் சென்றிருக்க வேண்டும்" என்றான் போலிஸ்.

"நானும் அதைத் தான் செய்தேன். அவர்கள் பின்னால் தான் சென்றேன். ஆனால் அவர்கள் நான் வருவதைக் கண்டு, திடீரென்று திருமண ஊர்வலத்திற்குள் நுழைந்துவிட்டனர். நான் வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்" என்றான்.

எழுதியவர் : (17-Apr-14, 11:59 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 161

சிறந்த நகைச்சுவைகள்

மேலே