தமிழர்களின்குருதி வாசனையுடன

மழலைகளை தொலையச் செய்தோம்..
உறவுகளைப் பிரியச் செய்தோம்..
பெண்கள்
சிறுமிகளை வன்புணர்ந்தோம்..
என்றெல்லாம் கொக்கரிப்பவர்களே
உம் மண்ணில் புதையுண்ட
உருவங்களும் உண்மைகளும்
மாண்ட தமிழர்களின்
குருதி வாசனையுடன்..
ஒவ்வொரு மூலையிலும் சுற்றித்
திரிந்து தமிழ் மணத்தைப்
பரப்பும்!
தமிழர்களின் குருதி வெப்பத்தில்
குளிர்காய்ந்தவர்கள்..
இரத்த வெள்ளத்தில்
நர்த்தனமாடியவர்கள்
தெரிந்து கொள்ளுங்கள்
நாங்கள் அழியவில்லை
உலகின் ஒவ்வொரு மூலையிலும்
அவதரித்துக் கொண்டிருக்கிறோம!!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (17-Apr-14, 1:03 pm)
பார்வை : 68

மேலே