மனதை தொடும் நிகழ்ச்சி

படித்தேன் பகிருகின்றேன் ....

ஒருஅவசர அழைப்பினால் ஒரு மருத்துவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைகின்றார் . உடைகளை மாற்றி கொண்டு நேராக அறுவை சிகிச்சை அறைக்கு சென்றார்.

அங்கு பையனின் தகப்பன் அமர்ந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.. மருத்துவரை பார்த்த உடன் அந்த தகப்பன் எரிந்து விழுந்தார் மருத்துவரிடம் . ஏன் இத்தனை நேரம் உங்களுக்கு வருவதிற்கு .? ஏன் மகனின் நிலை மிகவும் மோசமாக இருகின்றது என்பது உங்களுக்கு தெரியாதா ? உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கா?

மருத்துவர் புன்னகையுடன் கூறினார் . மன்னிக்கவும் நான் மருத்துவமனையில் இல்லை எவ்வளவு வேகமாக வர முடியுமோ வந்தேன் . இப்போது உங்களுக்கு பதில் கிடைத்து இருக்கும் என நினைக்கின்றேன் . நான் ஏன் வேலையை தொடர்கின்றேன் . மௌனமாக இருங்கள் .

என்ன மௌனம் ? உங்கள் மகன் இந்த நிலையில் இருந்திருந்தால் இந்த மாதிரி பேசுவீர்களா ? உங்கள் மகன் இறந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று மிகவும் கோபமாக கேட்டார் தகப்பன் ..

மருத்துவர் புன்னகையுடன் கூறினார் நான் ஒன்று கூறுகின்றேன் ஹோலி புக் இல் இருந்து . "நாம் எல்லோரும் மண்ணிலிருந்து தான் வந்தோம் மண்ணுக்கு தான் போக போகின்றோம் கடவுளின் அருளால் இங்கு வாழுகின்றோம் . மருத்துவர்கள் உங்கள் மகனின் வாழ்க்கையை தடுக்க முடியாது . நாங்கள் எங்களால் ஆனதை செய்கின்றோம் . கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் .

அறிவுரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அது மிக சுலபம் முணுமுணுத்தார். தகப்பன் .

அறுவை சிகிச்சை நடந்தது 4 மணி நேரமாக . மருத்துவர் வெளியில் வந்தார். உங்கள் மகனை பிழைக்க வைத்து விட்டோம் கடவுளின் அருளால் . சந்தோசம் . தகப்பனின் பதிலுக்கு காக்காமல் மருத்துவர் வேகமாய் வெளியில் வந்தார் .

உங்களுக்கு ஏதாவது கேட்க வேண்டுமானால் nurse இ கேளுங்கள் என்றார் ..

இவர் என்ன இவ்வளவு திமிராக இருக்கின்றார் கொஞ்ச நேரம் இருந்து ஏன் கேள்விகளுக்கு பதில் கூட கூற முடியாதா ஒரு மருத்துவரால் ?

கண்களில் நீர் வடிந்தவரே nurse கூறினாள் மருத்தவரின் மகன் நேற்று விபத்தில் இறந்து விட்டான். அவர் மயானத்தில் இருந்து வந்து இந்த அறுவை சிகிச்சையை செய்ய வந்தார். . உங்கள் மகனின் உயிரை காப்பாற்றி விட்டார் . திரும்பவும் மயானத்திற்கு செல்கின்றார் இறுதி சடங்கை முடிக்க .

கருத்து :

யாரையும் தவறாக எடை போடாதீர்கள் ஏனெனில் அடுத்தவர்களின் வாழ்க்கையை பற்றியும் அவர்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள் எனவும் நமக்கு தெரியாது .

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (17-Apr-14, 1:32 pm)
பார்வை : 262

மேலே