பிரசவ வலி

கடலலைகள் திரண்டு
இடி மின்னலுடன்
கனமான அழுத்தத்தை ஏற்படுத்த ..
கனமான அழுத்தம்
கண்களில் கண்ணீரை ஏற்படுத்த
கால்களின் தசை பிடிப்புக்கள்
காயத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்த
ஊசி போன்ற வலி
உலையில் தண்ணீர் கொதிப்பது போல்
உச்சி முதல் பாதம் வரை ஊடுரவ ..
உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும்
நொறுங்குவது போன்ற வலி ...
கண்களை மூடி '
கடவுளை வேண்டி
கதவு திறக்கும் வரை
கனமான வலியை
கண்ணீரோடும்
மன வலிமையோடும் பொறுத்து
இன்னும் சிறிது நேரம்
இன்னும் சிறிது நேரம் என்ற
மருத்துவர்களின் வார்த்தைகளுக்கு
எப்போது அந்த நேரம் என
ஏக்கத்துடன் ஏங்க வைத்து
உலகிற்கு மற்றுமொரு
தலைவனை
கலைஞனை
கணித மேதையை
விஞ்ஞானியை
ஆசானை
பெருமைக்குரிய பெண்ணினத்தை
படைக்கும்
பெண்மையை
போற்றுவோம் ...