நகைச்சுவை 107
காலையில் எழுந்ததும் கணவன் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வான் என்று எதிர்பார்த்திருந்த மனைவிக்கு மிகுந்த ஏமாற்றம் காத்திருந்தது.
வழக்கம் போல் எழுந்தவுடன் தன் கடமைகளை செய்து விட்டு கணவன் ஆஃபீஸ் சென்று விட்டான்.
இரவு வெகு நேரம் வரை காத்திருந்தாள். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த கணவன் நிச்சயமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பான் என்று இன்னும் நினைத்திருந்தாள். ஆனால் அவனோ சொல்லவில்லை.
கணவனைப்பார்த்து மனைவி, "என்னை ஒருவாரம் பார்க்கமுடியவில்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்" என்று கேட்க கணவன் மிகவும் மகிழ்ச்சியுடன், "ரொம்பவே நல்லா இருக்கும்" என்று சொன்னான்.
செவ்வாய் தினம் வந்தது. மனைவியைப் பார்க்கவில்லை.
புதன் கிழமை வந்தது. மனைவியைப் பார்க்கவில்லை.
வியாழன், வெள்ளி இரண்டு நாளும் பார்க்கவில்லை.
சனிக்கிழமையன்று வீங்கியிருந்த கண்கள் கொஞ்சம் திறக்கமுடிந்ததும் ஓரக்கண்ணால் மனைவியைப் பார்க்கமுடிந்தது..

