மறந்துவிடாதே

சுற்றும் கடிகாரம் கூட நின்றுவிடும்,
நான் உனை நினைப்பதை நிறுத்திவிட்டால்..!
என் இதயம் துடிப்பது கூட நின்றுவிடும்,
நீ எனை நினைப்பதை நிறுத்திவிட்டால்..!!
நிகழ்வுகள் பல நகர்ந்து செல்லும்;
உறவுகள் பல கடந்து செல்லும்;
நிமிடங்கள் விரைந்து செல்லும்;
நாட்கள் பறந்து செல்லும் - ஆனால்....
உன் நினைவுகள்.....
என்றும் நெஞ்சை விட்டு நீங்காது..!!
நான் நினைத்திருப்பேன்..
சுற்றும் கடிகாரம் நின்ற பின்னும்,
உன்னை நினைத்திருப்பேன்..!
நீயும் என்னை மறந்துவிடாதே..
துடிக்கும் என் இதயம் நின்றபின்னும்..!!