முள்ளுக்குள்ளே முத்துக்குவியல்கள்

முள்ளுக்குள்ளே
முத்துக்குவியல்கள் அள்ளிட
விரைந்த
கைகளுக்கு
பட்டதோ காயம்..........!

பட்டுப்புடவை
ரம்மியமாய் நடக்க
கொலுசுகளின்
ஓசையை சுமந்து வந்தவள்
அருகிலே பார்த்தால்
பிச்சைக்காரி..................!

மாடி வீட்டு
முதலாளி
கை நிறைய வருமானம்
உனக்கு சொந்த வீடு
எனக்கோ அருகே
வாடகை வீடு..........!

வருமானம்
இல்லா நடுத்தர வர்க்கம்
கௌரவத்திற்காக
வாழ்ந்திட
ஊர் நிறைய
பெருங்கடன்...........!

எழுதியவர் : லெத்தீப் (18-Apr-14, 3:28 pm)
பார்வை : 81

மேலே