+++விடைகொடு எங்கள் நாடே+++

நிரந்தர உறக்கம்
வீதியிலே பிணமாக.......!
சுதந்திரத்தை
எதிர்ப்பார்த்த எங்களுக்கு
விடுதலை கிடைத்தது
மரணம்
என்ற பெயரில்............!
ஈழத்தில்
இழைக்கப்பட்ட கொடுமை
மறைவதில்லை
உனது பாவத்தை
பிறர் சுமக்க
போவதும் இல்லை..........!
விதைக்கப்பட்ட
விதை மரமாக வளரும்
நாங்கள்
மரணித்தாலும்.............!
யுத்தத்தை
இறந்தவர்கள் மட்டும் கண்டு
இருக்கிறார்கள்
எங்களைப்போல..........!
புதிய விடியல்
புதிதாக தோன்றும்
அசத்தியம்
மண்ணோடு புதைந்து
போகும்..........!
ஈழமே
உங்களை விட்டு
நாங்கள்
விடைபெறுகிறோம்
புதிய விடியலை
எதிர்ப்பார்த்து............!