என் பொம்மை அழுகிறது

ஒற்றை கால்
தவம்கிடந்து
பெற்ற பேராய்
நான் பிறந்தேன்

தள்ளாடி நான்
நடக்க துள்ளாட்டம்
போட்டபடி துணையாக
உனை அழைத்து
போவேனே எங்கேயும் !

கண் விழிக்கும்
நேரமெல்லாம்
உன் நெற்றியில்
முத்தமிட்டு
அம்மா தந்த
உணவினிலே
உனக்கு கொஞ்சம்
பகிர்ந்தளித்தேன் !

அரப்பு தேய்த்து
குளிப்பாட்டி
இரட்டை ஜடை
பிண்ணிவிட்டு
அங்கு கொஞ்சம்
இங்கு கொஞ்சம்
பொட்டுகளை
இட்டுவிட்டேன்!

குட்டை பாவாடை
கையில்லா சட்டை
யொன்றும்
உனக்கு அணிந்துவிட்டு
அதை கண்டு
மனம் மகிழ்ந்தேன் !

எல்லாம்
செய்தென்ன
வளர்ந்திப்போ
ஆளானேன்
நிச்சயம் செய்து
போன மணவாளன்
நிச்சயம் பூமுடித்து
பொண்டாட்டி
ஆக்கிடுவான்!

உன் இடத்தை
அவன்
பிடித்தான்
உனக்கும்
இடமுண்டு
பரங்கிமேல்
மூலையிலே !

என் பிள்ளை
உன் புகழை
சொல்லுமென
காத்திருப்போம்
அழுகாதே
என் பொம்மையே !!!!

- வெண்ணிலா பாரதி

எழுதியவர் : வெண்ணிலா பாரதி கோவை (18-Apr-14, 12:15 pm)
பார்வை : 88

மேலே