சோகமெனும் சுமைதாங்கி
சோகங்கள் எப்பொழுதும்
நம் சொந்தங்கள்தான்
சுகங்கள் எப்பொழுதேனும்
நம்மோடு உறவாடிவிட்டுப்போகும்!
துன்பங்கள் எப்பொழுதும்
நம் பந்தங்கள்தான்
இன்பங்கள் எப்பொழுதேனும்
நம்மோடு கைகுலுக்கிவிட்டுப்போகும்!
சோகங்களனைத்தும்
நம்மை அமுக்கிவிடப்பார்க்கும்!
துன்பங்களனைத்தும்
நம்மை அழித்துவிடப்பார்க்கும்!
சின்னச்சின்ன சந்தோசங்களை
சொர்க்கமென கொண்டாடி
மனதை வளமாக்குவோம்!
வாழ்வை நமதாக்குவோம்!

