போர்க்களம்

அண்டை நாடு பலவற்றை
அடியோடு சாய்த்திடவே,
பிறந்த குடி பெருமையை
பிறர் முன் பறை சாற்றிடவே,

வெற்றித் திலகமிட்டு
இல்லாள் துணையாய் நின்றிருக்க...
படைத் தளபதி இருவரும்
அறன் போல் துணை நிற்க...
யானைப் படை, குதிரைப் படை
இருதிசையிலும் வீற்றிருக்க...
படை வீரர்கள் நான்கிரண்டாய்
நெஞ்சம் நிமிர்த்தி நின்றிருக்க...

போர்க்களம் யாவும்
மயான அமைதி காத்திருக்க...
முப்படை யாவும்
எதிரெதிர் பார்த்திருக்க...
போர் முரசு வான் பிழக்க
புனிதப் போர் தொடங்கியதே !!!

ஓர் அடியாய் இரு அடியாய்
படிப் படியாய் முன்னேறி,
எதிரியின் தலைகள் யாவும்
ஒன்றொன்றாய் வீழ்கிறதே !!

எதிரித் தலைகள்
எட்டுத்திக்கும்
குருதி தெறிக்க
சாய்த்தப்பின்பு
என்னிரு போர்வீரர்
விழுப் புண்ணுடன் சரிந்தனரே !!

எதிரியின் படை நோக்கி
எம் படை முன்னேற,
தாவிவந்த குதிரைப்படைகள்
புற முதுகு காட்டிடுதே !!


வருவதாய் ! வேண்டாமாய் !!
திணறித் திணறி எட்டி வைத்த
யானைப் படை இரண்டினையும்
முட்டி போட வைத்து விட்டு
சிரம் கொய்து மகிழ்ந்தனவே
மந்திரியவர் உடைவாலே !!

எதிரி நாட்டு மந்திரிகள்
தந்திரமாய் நுழைந்திடவே,...
கூரில்லா உடைவாலை
என் முன்னே காட்டிடவே...
எம் குதிரைப் படை – அத்தனையும்
மார் காட்டி சாய்ந்ததுவே,!!
பிறந்த ஊர் பெருமைகளை
நிலைநாட்டி சென்றனவே !!!

படைகள் தத்தம் படைகளை
அழித்திடவே,
யாரும் காணா நேரத்திலே
எதிரி நாட்டு இளவரசி
என்னைத் தாக்க முற்படவே...
உடையவள் குறுக்கிட்டு - என்
மடிசாய்ந்து உயிர் நீத்தாள் !!

உற்றவள் பிரிவினிலும்
“வெற்றி வேல் !! வீர வேல் !!”
சத்தம் மட்டும் நித்தம் நித்தம்
செவியினிலே ஓயாமல் ஒலித்தனவே !!

அத்தனையும் இழந்துவிட்டு
அண்டை நாட்டு வீரமன்னன்
ஒற்றை உயிரென
நிராயுதமாய் நின்றிடவே...
எஞ்சிய எம் படைகள்
நமட்டு சிரிப்பு சிரிக்கிறதே !!

ஒன்றொன்றாய் அரைநூறாய்
அடியெடுத்து வந்தெந்தன்
கால் பிடிக்க முற்பட்டான்...

துணைவியின் பிரிவும்
துணை நின்றோரின் வலியும் எண்ணிடவே,
வால் எடுக்கும் உருவல் போர் சத்தத்திலே
நிசப்தம் செய்தேனே !!

உற்றார் உறவினர்
துணை நின்று ஆர்ப்பரிக்க,
வெற்றி முரசு கொட்டியதே !!!

சதுரங்க பெட்டியை
மூடி வைத்தபின்
விளையாட்டும்
சுகமாய் இனிதாய் முடிந்தனவே !!!

ஹா ஹா ஹா.......
வெற்றி வெற்றி.......

எழுதியவர் : (18-Apr-14, 10:36 pm)
Tanglish : porkkalam
பார்வை : 483

மேலே