சாது திரண்டால்

சாது மிரண்டால்
==== காடு கொள்ளாது!
சாதுக்கள் திரண்டு
==== வீதிகளுக்கு வந்து
வாகன ஓட்டிகளிடமும்
==== வழிப்போக்கர்களிடமும்
வாக்குக் கேட்டால்
(வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிரளாது)
==== வாக்கென்ன கொடுத்து
வாக்குக் கேட்பாரோ?
………….
யாரறிவார் பராபரமே?