நெஞ்சே நீ சொல்

சிற்பி செதுக்கிய சிலைகள்
சிந்தைக்குள் நிற்கும் சிகர மலைகள் !
பள்ளியில் பயின்ற பாடம்
வெள்ளியாய் விடியலைக் கூவும் !
++
படிப்பைக் கெடுக்கும் காதல்
பலனை முடக்கும் பயிர்நோதல் !
கடிவா ளமிட்ட குதிரைகள்
கண்காணிப்பில் வளர்ந்த குழந்தைகள் !
++
இளமையில் செய்த தவறுகள்
இதயத்துள் நுழைந்த சர்ப்பங்கள் !
செருப்பி லேறிய முள்ளுகள்
காலைக் குத்திய கல்லுகள் !
++
காற்றைப் போல வாக்குகள்
காலொடிந்த பறவைகள்!
காட்டைப் போல நாடுகள்
காய்ந்தாலும் மேயும் மாடுகள் !

எழுதியவர் : படைக்கவி பாகருதன் (19-Apr-14, 3:04 pm)
பார்வை : 215

மேலே