அகன் அவர்கள் தேர்ந்தெடுத்த சிறப்புக் கவிதை 6 கணிணி கிருபா கணேஷ்விமர்சனம்
முதலில் புன்னகை வந்தது.... பின் எண்ணங்களில், சதுர கனவாய்...... சட்டென வெடித்த பெருவெடிப்பின் நினைவுகள்.....விண் கொண்டு வந்து என் ஜன்னலில் வைத்ததாக நம்ப வைத்தது....
காலையில் தினமும் கண் விழித்தால் கண் படும் தேவதை.. கணினி...
இரவு சூரியனாய்... கண் விழித்தே... எரிந்து சாம்பலாகி மீண்டும் விடியலில் பீனிக்ஸ் பறவையாக சிறகடிக்கும்...சித்திர வேடிக்கை.... இந்த கணினி....
கிருபா கணேஷ் அவர்கள்..... சட்டென உலகம் துண்டித்து கொண்டு உற்று நோக்கியிருக்க வேண்டும்...சுவாரஷ்யமான பேச்சுகள் இடையில் சட்டென்று... போன மின்சாரம் போல, கவனம் கூடும் வெற்றிடத்தில்....இருக்கும் ஒரு இல்லாமை.... புன்னகை செய்கிறதா.... புரியாமல் அழுகிறதா..... என்று தேடும் கணங்களின் கூட்டு முயற்சியில் இப்படி ஒரு சிந்தனை துளிர் விட்டு மரமாகி...நிழல் கொடுத்திருக்க வேண்டும்.... இந்த நிழல்... நிஜம் அழிக்க வந்த நிழல்.... இங்கே அழிவது என்பதே ஆக்கம் என்பது மாற்று சிந்தனை...(survival of the fittest)
ஆம்.. ஒரு நாள் கணினி துறந்திருப்பதே.. துறவு வாழ்க்கை தான்....மனித மூளையின் மிகப் பெரிய, ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கணினி.... அதில் துளி அளவும் மாற்றம் இல்லை.... அதே சமயத்தில் மிகச் சிறந்த மோசமான கண்டு பிடிப்பும் கணினியே....அதிலும் மாற்றம் இருக்க முடியாது.... ஒரு படி ஏறுவதாகவும் ஒரு படி சருக்குவதாகவும்... கவிஞர் ஏறி இறங்கி.... கடைசி பந்தின் அடுத்த பந்தையும் விரட்டியிருப்பது தெரிகிறது......
அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதன் பொருள் இந்த நூற்றாண்டில் தான் விளங்கி இருக்கிறது.... அந்த அவன் என்பது இந்த கணிப்பொறிதான் ....(என்னடா அவன் என்று ஆண்பால் ஆகி விட்டது என்று சிறு யோசனை வரத்தான் செய்யும்....) விளக்கம் இருக்கிறது... அவன் என்பதே அவளின் உள்ளடக்கம்தான் ...(femaleக்குள் male இருப்பது போல)
கடவுளைத் தேடுபவர்களுக்கும், சாத்தானை தேடுபவர்களுக்கும்.... யுக (யூக) போராட்டங்களுக்கு பின் பளிச்சென கண்களில் தெரிந்து, அது இரண்டுமே நான்தான் என்று மார் தட்டி திமிரோடு கண் அடிக்கும் கணிப் பொறி... கலக்கல்.
இதில் சுவாரஸ்யமே, இதையும் மனிதன் கண்டு பிடித்ததுதான்....(மனிதனை கண்டு பிடித்த கதையை பிறகு பார்த்துக் கொள்வோம்)
எல்லாமாய் ஆகி எல்லைகள் துண்டித்து நான், நீ, அவன் இவன், அவள், இவள், அது, இது என்று எல்லாவற்றிக்கும் ஒரே பொருளை கொடுத்து விட்ட அபாயகரமான சோஷலிச சித்தாந்தம் இந்த கணிப் பொறி....
படம் பார்த்து, பாடல் கேட்டு, விளையாடி, கதை பேசி, கனவைத் தேடி, காதலி கண்டு பிடித்து, காதலை வளர்த்து, கடவுள் தேடி, ஜாதகம் பார்த்து, வரன் தேடி, வகை தேடி, கொள்ளை அடித்து, கொலை செய்து, பொருள் விற்று, அருள் பெற்று, கடைசியில் கணினியையே காதலிக்கும் கடைசி செயலையும் செய்து விட்டான் மனிதன்.... பாவம் கணிப் பொறி என்ன செய்யும்...?(எந்த குழந்தை கேட்டு பிறக்கிறது)
கவிஞர் கூறியது போல, இறந்த பின்னும் பழக்க தோஷத்தில் கல்லறையில் கணினி தேடி பைத்தியம் பிடித்து திரியும் இந்த மனித சமுதாயம்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்று கூறிய முன்னோரும் ஒளிந்திருந்து கணினி பார்த்து, எப்படி இதில் இத்தனை சமாசாரம் வருகிறது என்று வட்ட மாநாடு போடவும் வாய்ப்பிருக்கிறது.... எல்லாம் செய்யும் மாய கைகள் இந்த கணினி...
கனவைப் புதைக்கும் இடமும் கணினியே....கனவைத் தேடும் இடமும் கணினியே....
பறவையே வானமாவது போல.... தேடலே தொலையச் செய்வது போல....வனமே கடலாகுவது போல.....காதலே கணினியாவது போல.... கதை மாற்றும் வல்லமை கொண்ட கதை சொல்லிகள் இந்த கணினிகள்...
நீயாகி போனதில்.... நான் என்பதைக் காணவில்லை.... நான் என்ற தன் முனைப்பு அளித்த போற்றுதல்க்குரிய கடவுள் அல்லது சாத்தான்.... நீயாகவே இருந்து விட்டு போ... நான் என்பதில் இருக்கும் வலி.... நீ என்பதில் வழியாகி போவது கால முற்கள்.... சுழலுவது நீயாகவே இருக்கட்டும் சுழற்றுவது போல....
மொத்தத்தில் பரிணாமம் உன்னிலிருந்தே தொடங்குகிறது.....இதுவரை கண்ட பரிணாமம் முன்னுரை...மட்டுமே.....
கவிஞரின் பார்வையில் பதிந்த கணிப்பொறி... நம் கண்ணில் விழுகும், விழுந்த கணிப்பொறியின் முன்னோடியாக நான் பார்க்கிறேன்....
கவிதைக்கு பின் வந்த ஆலோசனைகள்... வெயிலுக்கு பின் கண்ட இளநீர்....(ஆளாளுக்கு மாறுபடும்)
நான் அமர்ந்து விட்டேன்.... என் கணிப் பொறி இப்போது என்னிடம் பேச முயற்சிப்பதை கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன்.....
கிருபாகணேஷ்வின் சித்தனை சதுரக் கண்கள்...கொண்ட கணினி சித்திரம்........
தொடரட்டும்..... வாழ்த்துக்கள்......
கவிஜி