+காக்கா கடி+
பாட்டி வடை சுட்ட கதையில்
வடையை சுட்டது பாட்டியா காக்கையா
நரியிடம் காக்கா ஏமாந்தது பற்றி
ஏமாந்த காக்காவிற்கு தெரியுமா..?
காக்காவை ஒரு புறம் ஏமாந்ததாய் காட்டிவிட்டு
மறுபுறம் நீர் தேடி அலையும் போது
குடுவையில் கல் போட்டு நீரை மேலே வரவைத்து
குடித்ததாய் காட்டி அதனை அறிவாளி ஆக்கிவிட்டோம்
காக்கா அறிவாளி என்பதாவது அதற்கு தெரியுமா..?
காக்காவிற்கே தெரியாத ஒன்றை
நாம் உரிமை கொண்டாடுகிறோம்
அது தான் காக்கா கடி..
தமிழ் தெரிந்த ஒவ்வொருவருக்கும்
பழக்கப்பட்ட இந்த காக்காகடிக்கு
வரியாகத்தான் மச்சுவீடுகளில்
காக்காவிற்கு உணவு படைக்கிறோமோ என்னமோ...!!!