ஆனந்த பையுள்

ஆனந்த பையுள் என்பது புறத்தினைகளில் வரும் துறைகளில் ஒன்று அதாவது கணவனை இழந்து வாடும் மனைவியின் துயரத்தைப் பாடுவது ஆனந்த பையுள். ஆனந்தப் பையுள் துறையில் நான் எழுதிய ஒரு வெண்பா :
------------------------------------------------------
மஞ்சுலவு வெண்ணிலவு வெள்ளை உடையுடுத்தி
நெஞ்சுபதைப் புற்றே இருப்பதெல்லாம் - மஞ்சளுடன்
மங்களமும் சேர்த்தே தொலைத்திட்ட என்முகமும்
மங்கலுறக் கண்டபின் தான்
-விவேக்பாரதி