நரியின் ஆசை 0தாரகை0

தகதகவென மின்னுவது
தங்கமாகுமா?
நெய் ஒழுக பேசுவது
மெய்யாகுமா?

செவசெவவென பழுத்ததெல்லாம்
பழமாகுமா?
கதகதவென ஒளி தந்தால்
கதிரவனாகுமா?

வெள்ளை நிற திரவமெல்லாம்
பாலாகுமா?
சொல்லை அடுக்கி கவிதையென்று
சொல்லமுடியுமா?

மல்லிகையின் மணத்தைதான்
மறைக்கமுடியுமா?
தாமரையை தலையில் சூட்டி
மகிழமுடியுமா?

விற்காத பொருளுக்கு
விளம்பரம் இருக்கு
நாட்டையாள வேட்டையாட
நரிக்கு ஆசை எதற்கு?

எழுதியவர் : தாரகை (21-Apr-14, 9:13 am)
பார்வை : 347

மேலே