சரியான தப்பு -கே-எஸ்-கலை
![](https://eluthu.com/images/loading.gif)
அமைதிக்காக
ஆர்பாட்டம் செய்வதும்
சமாதானத்திற்காக
சண்டைப் பிடிப்பதும்
முட்டாள்தனம் என்பதை
அறியாத அறிவே ஆறாம் அறிவு !
மூளைச்சலவையில்
அழுக்கேற்றிக் கொள்கிறது
அடிப்படைவாதப் போர்வைகள் !
முக்கால் பங்கு
மானுடரின் புத்தியை
தொற்றிக் கொண்டிருக்கிறது
கடவுள் என்ற ஃபோபியா!
மதக் காடுகளில்
எல்லோரும்
முயல் பிடிக்கிறார்கள்
எல்லா முயல்களுக்கும்
மூன்று கால்கள் !
அவனவனுக்கு
அவனவன் சுத்தம் !
அடுத்தவனுக்கு
அடுத்தவன் அபத்தம் !
"U" வளைவில்
திரும்பிப் போகும்
நாகரீக யாத்திரை
கூடிய விரைவில் கண்டுபிடிக்கும்
நிறைய ஆதாம்கள் ஏவாள்கள்
வாழ்ந்தார்கள் என்பதை -
"மதங்களின் கிருபையால்"!