காத்திருக்கிறேன்

உனக்காக
நான் துரத்திய
மயில்தான்
இன்று
உன்னைத் தேடி
தன் இறகை பரிசாக
உன் கையில் கொடுத்துள்ளது.
உன்மேல்
எனக்குள்ள காதலை
தெரிவித்த மயில்
என்மேல்
உனக்குள்ள காதலை
என் கையிலும்
தன் இறகைக்
கொடுக்குமென்று
என் கையை விரித்து
காத்திருக்கிறேன்
- நந்தலாலா பாண்டியன்