பாண்டியன் A - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாண்டியன் A
இடம்:  Madurai
பிறந்த தேதி :  18-Aug-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Apr-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  15

என்னைப் பற்றி...

நான் சிறுகதை, கவிதை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உடையவன். நல்ல படைப்புக்களை மட்ட்ரவர்களுக்கும் பகிர்ந்து வருகிறேன்.
கணினியில் டி டி பி பணிபுரிகிறேன் .

என் படைப்புகள்
பாண்டியன் A செய்திகள்
பாண்டியன் A - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2014 1:35 pm

உனக்காக
நான் துரத்திய
மயில்தான்

இன்று
உன்னைத் தேடி
தன் இறகை பரிசாக
உன் கையில் கொடுத்துள்ளது.

உன்மேல்
எனக்குள்ள காதலை
தெரிவித்த மயில்

என்மேல்
உனக்குள்ள காதலை
என் கையிலும்
தன் இறகைக்
கொடுக்குமென்று
என் கையை விரித்து
காத்திருக்கிறேன்

- நந்தலாலா பாண்டியன்

மேலும்

பாண்டியன் A - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2014 1:31 pm

தாகமெடுத்து
தண்ணீரெடுக்க வந்தாள்

கரை வந்த அவளோ
தலைவன் வருகையை
எண்ணியயண்ணி
காத்திருந்தாள்
தண்ணீருக்கு காத்திருக்கும்
அந்த மண்பானையைப் போல!

- நந்தலாலா பாண்டியன்

மேலும்

சங்ககால நூல்களில் உள்ள கருத்துகளை எடுத்து தற்கால நடையில் ஒரு கவிதை படைப்பு. அழகான தலைவியின் காதல். மிக அருமை. வாழ்த்துக்கள் தோழரே. 21-Apr-2014 1:40 pm
பாண்டியன் A - பாண்டியன் A அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2014 11:08 am

இன்று
நீ
கூண்டில்
அடைபட்டுக் கிடந்த
பறவைகளை
விடுதலை செய்ததைப் போல்

விடுதலை செய்யும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம்
சிறைபட்டுக் கிடக்கும்
என் காதல் பறவையும்!

- நந்தலாலா பாண்டியன்

மேலும்

அருமை 19-Apr-2014 6:19 pm
பாண்டியன் A - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 11:08 am

இன்று
நீ
கூண்டில்
அடைபட்டுக் கிடந்த
பறவைகளை
விடுதலை செய்ததைப் போல்

விடுதலை செய்யும் நாளை
எதிர்நோக்கி காத்திருக்கிறது
உன்னிடம்
சிறைபட்டுக் கிடக்கும்
என் காதல் பறவையும்!

- நந்தலாலா பாண்டியன்

மேலும்

அருமை 19-Apr-2014 6:19 pm
பாண்டியன் A - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2014 10:23 am

விவசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக
புல் மேயும் ஆடுகளோ
மரம் மேலேறி மேய

இதுபோல் ஒரு நாள்
மனிதனும் உணவைத்
தேடித் தேடி கடைசியில்
மண்ணைத் தின்பான்

- நந்தலாலா பாண்டியன்

மேலும்

பாண்டியன் A - பாண்டியன் A அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 11:47 pm

மின்னலை உள்வாங்கி
தங்க இலைகளாய்
மின்னுகின்றன
மரங்களிலுள்ள
இலைகள்

பாதங்களை
குளிர்விக்கிறது
தரையில் ஓடும்
நீர்

நீலமாய் நிறம் மாறி
பொழுதை
ரம்மியமாக்குகிறது
வானம்

இன்னும் கூடுதல் அழகாய்
உன்னோடு
என்னைச் சேர்த்து
நடக்க வைத்தது
இந்த
ஒற்றைக் குடை!

மேலும்

ஆஹா !அபாரம் !தொடருங்கள் நன்று ! 18-Apr-2014 6:04 pm
நல்ல ரசனை ! 17-Apr-2014 10:29 pm
மிக்க நன்றி 17-Apr-2014 5:02 pm
மிக்க நன்றி 17-Apr-2014 5:01 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே