சம்பளம்

ஏழை மக்களின் அவல்
செல்வந்தர்களின் நஞ்சு !
நடுத்தர மக்களின்
நான்கு எல்லை மதில் !
உழைப்பின் ஊதியம்
உயிரின் உயரிய வாயு!
கடன்களின் உறைவிடம்
கரையும் காகிதம் !
பெரும் வரை பரவசம்
பெற்ற பின் பெண்கள் வசம் !
மனிதர்களின்
மதிப்பை நிர்ணயிக்கும் ஆயுதம்!
மாதத்தின் முதல் வாரமே
மாயமாய் மறையும் மர்ம ஜாலம் !
சம்பளம்
மனிதர்களை
சம தளத்திலும் நிறுத்தும்
பள்ளத்திலும் தள்ளும் !